Wednesday, February 04, 2009

என் தாயின் கருவறை...



கர்பக்ரகத்தின் உள்ளே தான் சாமி இருக்கும்
ஆனால்
என் சாமிக்கு உள்ளே தான் கர்பக்ரகமே...

Sunday, November 02, 2008

நீ வேண்டும்



வற்றி விடாத என
வறண்ட இதயத்தோடு
காத்திருக்கும் உனக்கு
ஒவ்வொறு நொடியையும்
கரை இல்ல கண்ணீர் கடலில்
துடுப்பு இட்டு - உன் நாட்களை
கடக்க விட்டது யார்?

உடன் இருக்க சூல்நில்லை இல்லை
சுற்றி இருப்பவர்கள் உடன் இல்லை

உன் கண்ணீரை துடைக்க
கை குட்டை வாங்க
எதிர்காலத்தை நோக்கி செல்லும் எனக்கு
உன் கண்ணீரை சுமந்து செல்லத்தான் முடியவில்லை

உன் கண்ணீரில் இருக்கும்
உப்பை விட - உன் மனதில் இருக்கும்
கசப்பு தான் அதிகம்

உன் பாதத்திலிருந்து வரும் ரத்தம் பட்டு
நீ செல்லும் முள் பாதை
மலர்கள் நிறைந்த பாதையாகும் நிச்சயம்
அந்த மலர்ந்த எதிர்க்காலம்
உன் பெயரை சொல்லும் - ஆனால்
என் பெயர் சொல்ல அதுவரை நீ இருக்க வேண்டும் அம்மா...

Wednesday, November 22, 2006

முடிந்திருந்தால்...



விலைக்கொடுத்து

வாங்க முடிந்திருந்தால் - என்

உயிரை விற்று இருப்பேன் - உனக்கு

புன்னகையை வாங்க...

Wednesday, October 18, 2006

மறந்து...



நான் இறந்த பின்பு - என்

இதயத்தை எடுத்துவிட்டு புதையுங்கள்

இல்லையெனில்

உயிரோடு இருக்கிறேனென

என் அம்மாவிற்க்கு

டீ வாங்க எழுந்தாலும் எழுந்துவிடுவேன்...

Sunday, October 15, 2006

சாத்தியமா?


இறைவனது படைப்பில்

இது சாத்தியமாகும் என்றால்

நான் இறந்த பின்பு

என்னை

கல்லறையில் புதைக்காதீர்கள்

என் தாயின்

கருவரையில் புதையுங்கள்...

சொர்க்கம்...


இறந்த பின்பு

சொர்க்கத்திற்கு

போகவேண்டும் என்பது

பலரின் ஆசை - ஆனால்

எனக்கில்லை - காரணம்

நான் பிறந்ததும்

வளர்ந்துக்கொண்டிருப்பதும்

சொர்க்கத்தில் தான் - ஆம்

இறைவன் எனக்காக

படைக்கப்பட்ட

சொர்க்கம் என் அம்மா...

Saturday, October 14, 2006

என் அம்மாவை பற்றி,


இவர் என்னுடைய அம்மா. இவர் பெயர் கிருஷ்ணவேனி. இவருக்கு மகனாக பிறந்ததற்க்கு நான் எத்தனை பிறவி எடுத்தாலும், எங்கு பிறந்தாலும் நன்றி சொல்லிக்கொண்டுதான் இருப்பேன். அடுத்த பிறவியிலும் இவருக்கே மகனாக பிறக்க வேண்டும் என்பது தான் ஆசை, ஆனால் மீண்டும் இவருக்கு மகனாக பிறக்க இந்த ஜென்மத்தில் எந்த புன்னியமும் இதுவரை பண்ணவில்லை. எனக்காக உணவு மறந்து, உறக்கம் மறந்து, உறவை இழந்து, சந்தோஷத்தை இழந்து எனக்காக மட்டுமே வாழ்ந்துக்கொண்டிருக்கும் என் அம்மாவிற்கு இந்த ஜென்மம் முழுக்க நான் அவர் கூட இருந்து அவரை பார்த்துக் கொண்டாலும், அவர் என்னை பார்த்துக்கொண்டதில் கால் பகுதி கூட முழுமையடையாது. கால் பகுதி மட்டுமாவது முழுமையாக நான் இறைவனிடம் வேண்டும் வரம் அடுத்த பிறவியில் என் அம்மா எனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று. எல்லோரும் சொல்ல நினைப்பதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன் என்றாலும், உண்மையை யார் சொன்னாலும் பொய்யாகப்போவதில்லை. இது காதல் இல்லை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அன்பு வைக்க, அதை கற்பனை கலந்து வர்ணிக்க, அம்மா என்பவள் ஒருத்திதான், அதனால் அனைத்து பிள்ளைகளின் ஆசையும் ஒன்றாக தான் இருக்கும். எனது வாழ்க்கை முழுதும் என் அம்மாவிற்க்கே சமர்ப்பனம்.